You are currently viewing புலம்பெயர்ந்த குழந்தைகள் கல்வி கற்றலில் கோவிட்-19 பாதிப்பு
Migrant Children Study 2021 - Impact of covid 19

புலம்பெயர்ந்த குழந்தைகள் கல்வி கற்றலில் கோவிட்-19 பாதிப்பு

தமிழ்நாட்டில் புலம்பெயர் குழந்தைகள் கல்வி கற்றல் மீது, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆக் ஷன் எய்டு அசோசியேஷன் (Action Aid Association), எய்ட் எட் ஆக் ஷன் (Aide et Action), அருணோதயா (Arunodhaya), மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (Human Rights Advocacy and Research Foundation), தமிழ்நாடு அல்லையன்ன்ஸ் (Tamil Nadu Alliance) ஆகிய அமைப்புகளினால் 2021 ஜனவரி முதல் 2021 அக்டோபர் வரையில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்தவற்றை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கிறது. மாநிலம்விட்டு மாநிலம் தங்கள் பெற்றோர்களுடன் புலம் பெயர்ந்த குழந்தைகள், மாநிலம் விடடு மாநிலம் குறிப்பிட்ட தொழில்களில் பணி செய்வதற்காக புலம்பெயர் குழந்தைகள், மாநிலத்துக்கு-உள்ளேயே (மாவட்டங்களுக்கு-இடையில்) குறிப்பிட்ட தொழில்களில் வேலை செய்வதற்காக தங்கள் பெற்றோர்களுடன் புலம் பெயர்ந்த குழந்தைகள் முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வுக்கான தரவுகள் செல்போன் ஆப்-ஐ பயன்படுத்தி 2021 மார்ச் 27 முதல் 2021 ஏப்ரல் 4 வரை சேகரிக்கப்பட்டன…

முழு அறிக்கை – தமிழ்