VAWG HSF செயல்முறைச் சுருக்கம்
இந்திய மக்களாகிய நாம் அவ்வப்போது ‘தேசத்தின் மனசாட்சியை உலுக்கும்’ சம்பவங்களை சந்திக்கிறோம், சிறிது நேரம் ஆவேசப்படுகிறோம், பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறோம். குற்றவாளிகளுக்கு மிகக் கறாரான மிகமிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதிகளால் அந்த ஆவேசம் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளபடி கடுமையான சம்பவங்கள் மோசமான சட்டத்தையும் மிக மோசமான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகின்றன.
அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள் என்ற இந்த ஆவணம் நமக்கு இரைச்சலைக் குறைக்க உதவுகிறது, பகுத்தறிவுப் பூர்வமான எதிர்வினைகள், பயனுள்ள நிவாரணங்கள், நிலையான தீர்வுகள் ஆகியவற்றுக்கான முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது; அதற்காக தேசிய குற்றப்பதிவு நிறுவனத்தின் (NCRB) 1953 முதல் 2022 வரையிலான வருடாந்திர இந்தியாவில் குற்றங்கள் அறிக்கைகளிலிருந்து பெறப்படும் தரவுகள், சம்பந்தப்பட்ட சட்டங்கள், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவை பயன்படுத்தப்படுள்ளன. எண்ணிக்கைகள் உங்களுக்கு முக்கியமானவை என்றால், அல்லது ஆதாரங்களுக்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பவர் என்றால் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்திருந்த புத்தகம் இதுதான்.
முழு செயல்முறைச் சுருக்கத்தைப் படிக்க 👇