தமிழ்நாட்டில் பேரிடர் காலங்களிலும் அதற்கு அப்பாலும் விளிம்பு நிலை மக்களிடையே மீள்வாடிநவு மற்றும் சமூக அணிதிரட்டல்
மனித உரிமை மற்றும் மேம்பாடு ஆராய்ச்சி அமைப்பு, சிறந்த ஆதரவு மற்றும் மீட்பு நிதியதுடன் (Recover Better Support Fund – GIZ) இணைந்து தமிழ்நாட்டில் பேரிடர் காலங்களிலும் அதற்கு அப்பாலும் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு செயல்முறைக்காக விளிம்பு நிலை மக்களிடையே மீள்வாழ்வு மற்றும் சமூக அணிதிரட்டல் பணியை நவம்பர் 2021இல் தொடங்கியது. தமிழகத்தின் 30 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் உள்ள 137 தொலைதூர ஊராட்சிகளில் குறிப்பாக பெண்கள், தலித் மற்றும் பழங்குடியினர் தலைவர்களாக உள்ள ஊராட்சியில் 18,000 விளிம்பு நிலை குடும்பங்களுடன், TN First (தமிழ்நாடு முதலிடம்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில்) என்ற முயற்சி மூலம் அனைத்து மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெறுவதையும், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சமூகங்கள் மேலும் மீள்தன்மை கொள்வதையும் உறுதி செய்தது.
இந்த குறுகிய காலத்தில், தொலைதூர குக்கிராமங்களில் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் முறையான அரசு அமைப்புகளை அணுகி, ₹776 மில்லியன் அளவிலான உரிமைகளை (நிலம், வீடுகள், ஓய்வூதியம் போன்றவை) பெற்றுள்ளனர். இதனை 454 நாட்களுக்கு என கணக்கிட்டால், ஒரு நாளுக்கு ₹1.7 மில்லியன் பண மதிப்புள்ள உரிமைகள் கிடைத்துள்ளன. கூடுதலாக, ₹650 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அவசரநிலை அல்லது உயிரிழப்பு நேரங்களில் வழங்கப்படும் அரசாங்க காப்பீட்டுத் திட்டங்களில் மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வியக்கத்தகு பணியை செய்து முடிக்க 1 டிசம்பர் 2021 முதல் 31 ஜனவரி 2023 வரை 43,166 விண்ணப்பங்கள் இணைய வழியிலும் நேரடியாகவும் அனுப்பப்பட்டன. இதில் 15,002 அடிப்படை சான்றிதலுக்கான விண்ணப்பங்களும் அடங்கும். இதில், 17,196 (39.84%) விண்ணப்பங்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான உறுதி சான்றிதழ்கள் /பயன்கள் பெறப்பட்டுள்ளன. இந்த சாதனைக்கு 34 மாவட்ட பொறுப்பாளர்களும் 23 மாவட்ட வழிகாட்டிகளும் முக்கிய காரணமாவார்கள்.
முழு அறிக்கை – தமிழ்