You are currently viewing தனித்து வாழும் பெண்களுக்கான கொள்கை அறிக்கை

தனித்து வாழும் பெண்களுக்கான கொள்கை அறிக்கை

ஒற்றுமையையும் வலிமையையும் கொண்டாடுதல்

 

தனித்து வாழும் பெண்களுக்கான முதல் மாநில மாநாடு, 2023 மார்ச் 8 அன்று நாங்கள்,

அனைத்து தனித்து வாழும் பெண்களுக்கும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை உண்டு என்பதையும், அவர்கள் தற்சார்பும், மேம்பாடும் அடைவதற்கும், அவர்கள் தங்களது திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி சாதிப்பதற்கும் ஏற்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டியது அரசின், மற்றும் சமுதாயத்தின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறோம்.

சாதி, வர்க்க, மத, அந்தஸ்து வேறுபாடு இல்லாமல் பெண்களை சட்டத்தின் முன் (14-வது பிரிவு) சமத்துவமான குடிமக்களாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது என்பதையும், சமத்துவத்துக்கும், பாகுபாடில்லாமைக்குமான உரிமையை (15-வது பிரிவு), அரசு வேலைவாய்ப்பில் சம வாய்ப்புக்கான உரிமையை (16-வது பிரிவு), கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை (21-வது பிரிவு) உறுதி செய்கிறது என்பதை நினைவுகூர்கிறோம்.

மேலும், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவது குறித்த ஐ.நா. ஒப்பந்தம், (UN Convention on the Elimination of All forms of Discrimination Against Women – CEDAW), 1993-ல் இந்தியாவும் ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கும், பாகுபாடான சட்டங்கள் மட்டுமல்லாமல் நடைமுறைகள், சடங்குகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தனிப்பட்ட குடிமக்கள் மேற்கொள்ளும் சமுதாயரீதியான பாகுபாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும், ஒரு பாலினம் உயர்ந்தது அல்லது ஒரு பாலினம் தாடிநந்தது என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த தவறான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் மற்றும் இதர நடைமுறைகள் அனைத்தையும் மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும்” (பிரிவு 5 (a)) உறுதிபூண்டுள்ளது.

 

முழு அறிக்கை – தமிழ்