முன்னுரை
உள்ளாட்சி அமைப்பே சமூகத்துடன் மிக நெருக்கமாக இயங்கும் அரசு இயந்திரம் ஆகும். முதல் மட்டத்தில் கிராமசபை வயது வந்தவர்கள் அனைவரும் அதன்
உறுப்பினர்கள், இரண்டாவது (கிராம பஞ்சாயத்து), மூன்றாவது (யூனியன்) மற்றும் மாவட்ட அளவுகளில் வார்டு உறுப்பினர் அல்லது தலைவர் வாயிலாக ஒவ்வொரு
கிராமத்திலிருந்தும் பிரதிநிதிகள் இருப்பர். பெண்கள் (50%), பட்டியலினத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் (மாநில அளவில் அவர்கள் விகிதத்திற்கேற்ப) விகிதாசார பிரதிநிதித்துவம் இருப்பதால், இதுவே இந்தியாவின் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட, அரசியலமைப்பின்படியான அமைப்பாக விளங்குகிறது.
உள்ளாட்சி அமைப்பிற்கு 29 அம்சங்கள் கைமாற்றப்பட்டிருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, உள்ளாட்சி அமைப்பின் உரிமைகளும் கடமைகளும்
அவற்றையும் தாண்டியவையாகும். இவ்வமைப்பே, நமது அரசியலமைப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நீதியை சமூக மட்டத்தில் உயர்த்திப்பிடிக்கும் அமைப்பாகும். தலித்துகள், பழங்குடியினர், புலம் பெயர்ந்தோர், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திரனாளிகள், முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்ற பாரம்பரியமாகவே சமூகரீதியாக விலக்கி வைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவரும் கிராமத்தின் மேம்பாட்டில் உட்படுத்தப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கான ஆண்டு 2023-கான அரசு நோக்கத்தின்படி சொன்னால், உள்ளாட்சி அமைப்புகள் “ஒருவரும் விட்டுவிடப்படாமல் இருக்க வேண்டும்” என்பதை dஉறுதி செய்யவேண்டும்.
முழு அறிக்கை – தமிழ்